புத்தாண்டு முதல் உச்சம் பெற்று வரும் கொரோனா! பொது இடங்களில் முககவசம் கட்டாயம்!
கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று அதிகம் இருந்ததால் தான் அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.மேலும் போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் முடக்கியது கடந்த 2022ஆம் ஆண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர் அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிபடியாக தொடங்கி உள்ளது.மேலும் தற்போது சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா பிஎப்7 வைரஸ் அதிகரித்து வருகின்றது.
மேலும் குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.புதுச்சேரியில் ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் புதுவையில் ஒன்பது பேருக்கும் ,காரைக்காலில் ஒருவருர் என மொத்தம் பத்து பேருக்கு புதிதாக தொற்று வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் புதுவையில் 22, காரைக்காலில் 3,ஏனாமில் 5 பேர் என மொத்தம் முப்பது பேர் தொற்று வைரஸ் பாதிப்பினால் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து புதுவை ,காரைக்கால்,ஏனாமில் ஒருவர் கொரோனா பெருந்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதினால் தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட நூறு பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி பொது இடங்களில் மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் ,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்,கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.