புதிய விதிகள் அமல்! இனிமேல் இவர்கள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை !

0
267
????????????????????????????????????

நெடுஞ்சாலையில் செல்வது பலருக்கும் பிடிக்கும் என்றாலும் தங்களுடைய பாக்கெட் காலியாகிவிடும் என்கிற பயம் பலருக்குள்ளும் இருக்கும். நீங்கள் செல்லும் நெடுஞ்சாலையில் எத்தனை சுங்கச்சாவடிகள் இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் பாக்கெட் பதம் பார்க்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இனிமேல் சுங்கச்சாவடிகளை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, இதுபோன்ற தொந்தரவுகளில் இருந்து நாம் விடுபட உள்ளோம். இனிமேல் நீங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவையில்லை மற்றும் உங்கள் நேரமும் மிச்சப்பட போகிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கடந்த செவ்வாய் கிழமையன்று மக்களவையில், கூறுகையில், இப்போது நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும், அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இனி 60 கி.மீ சுற்றளவில் மக்கள் ஒரு சுங்கச்சாவடிக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும், இரண்டாவது சுங்கவரியை 10 கிலோமீட்டர் எல்லைக்குள் செலுத்த வேண்டும் கூறியுள்ளார். சுங்கச்சாவடியின் விளிம்பில் வசிக்கும் மக்கள் வேறு கிராமத்திற்குச் செல்லக் கூட கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்து வந்த நிலையில், இனி உள்ளூர் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Previous articleஅரிசியில் இனி இதை சேர்க்கக்கூடாது! உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் அதிரடி உத்தரவு! 
Next articleமூட்டு வலி குணமாக வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!