அரிசியில் இனி இதை சேர்க்கக்கூடாது! உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் அதிரடி உத்தரவு! 

0
102

அரிசியில் இனி இதை சேர்க்கக்கூடாது! உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் அதிரடி உத்தரவு! 

அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்ப்பதை உணவு பாதுகாப்பு தர ஆணையம் தடை விதித்துள்ளது.

பெரும்பாலான மக்களின் விருப்ப உணவு பிரியாணி. இந்த பிரியாணி தயார் செய்வதற்கு மக்கள் அனைவரின் தேர்வு மற்றும் முதலிடத்தில் இருப்பது  பாசுமதி அரிசியே. அரிசி வகைகளில் பாசுமதி அரிசிக்கு என்று தனி முக்கியத்துவம் உண்டு. நீளமான மற்றும் அதிக நறுமணம் கொண்ட இந்த அரிசியில் செய்யப்படும் உணவுப் பொருட்களை மக்கள் விரும்பி உண்ணுவர்.

இந்தியாவில் இருந்து இந்த அரிசி பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாசுமதி அரிசியில் நறுமணத்தை கூட்டுவதற்கும் நிறத்தை மேம்படுத்தவும் செயற்கை நிற மூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதனை அடுத்து பாசுமதி அரிசியின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வாசத்திற்கு நிறமூட்டிகள் சேர்ப்பது மற்றும் கலப்படங்கள் சேர்ப்பது ஆகியன குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கலப்படங்கள் மற்றும் நிறமூட்டிகள் சேர்ப்பதை தடுக்கவும் நுகர்வோர் நலனை பாதுகாக்கவும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதன்படி பாசுமதி அரிசியில் செயற்கை நிற மூட்டிகள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

பாசுமதி அரிசியானது அதன் இயற்கை நறுமண பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வண்ணங்கள் சேர்ப்பது, பாலிஷ் செய்தல் செயற்கை வாசனை கலவைகள் சேர்ப்பது,ஆகியன அறவே தவிர்க்கப்பட வேண்டும். இந்த உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.