காளைகள் முட்டி பலியான வீரர்களுக்கு நிவாரண நிதி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்தவகையில் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.அதனால் மக்களுக்கு பொங்கல் பரிசாக அரசு சார்பில் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை,முழு கரும்பு வழங்கப்பட்டது.
மேலும் பொங்கல் விடுமுறைக்கு அனைவருமே அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் விடுமுறையை கொண்டாட ஏதுவாக இருக்க அனைத்து இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.பொங்கல் பண்டிகை என்றாலே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அனைத்து இடங்களிலும் நடத்தப்படும்.அந்த வகையில் மதுரை அலங்காநல்லூர்,அவனியாபுரம்,பாலமேடு போன்ற இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் புகழ்பெற்றது.
மேலும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அரவிந்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் புதுக்கோட்டை மாவட்ட மாவட்டம் கே ராயவரம், சிவகங்கை மாவட்டம் சிராவயல்,தருமபுரி மாவட்டம் தடங்கம் ஆகிய இடங்களில் ஜல்லிகட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.அப்போது களைகள் முட்டி பலியான மாடுபிடி வீரர்களின் குடும்பங்களுக்கு பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 3 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.