நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மஞ்சள் டீ! அவசியம் என்பதற்கான காரணங்கள்!
மஞ்சள் மங்களகரமான பொருள் மட்டுமல்ல. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள ஒரு கிருமி நாசினி. உடலில் எங்காவது வீக்கம், காயமோ, இருந்தால் அதை போக்கும்.
இதில் உள்ள குர்க்குுமின் என்ற பொருள் உடலில் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கும். மேலும் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதையும் தடுக்கும்.
இந்த மஞ்சள் டீயை தயாரிக்கும் முறையை பார்ப்போம்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். பிறகு ஒரு சிறிய துண்டு இஞ்சி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக கட் பண்ணி போடவும். இஞ்சியானது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.
அடுத்து இதில் 5 மிளகு சேர்க்கவும். இந்த மிளகானது மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருளை ஈர்க்க செய்கிறது. அடுப்பில் உள்ள தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை நன்றாக கொதிக்க விட்டு வெதுவெதுப்பான சூட்டில் வடிகட்டிக் கொள்ளவும். பிறகு இதில் அரை மூடி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும்.
இதில் உள்ள நன்மைகள்;
1. இதை தினமும் குடித்து வர மூட்டு வலி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. பித்தப்பையில் பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடிக்கு குடிக்க வேண்டும். பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கும், இந்தப் பித்த நீரானது கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்கும். உடல் எடையையும் குறைக்கும்.
3. புற்றுநோய் வருவதை தவிர்க்கும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது இதயத்தை பாதுகாக்கிறது.
4. ஆஸ்துமா மட்டுமில்லை நுரையீரலில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை இந்த பானம் சரி செய்யும்.
5. வயதான காலத்தில் வரும் அல்சைமர் என்ற வியாதியையும் தவிர்க்கும். கல்லீரல் பாதிப்பை சரி செய்கிறது. கல்லீரலில் வீக்கம் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அதை குணமாக்கி கல்லீரலை பலமாக்க உதவுகிறது.
6. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதில் தேன் கலக்காமல் இந்த பானத்தை அருந்தலாம். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றும்.
7. செரிமான பிரச்சனை உடையவர்களும் சளி இருமல் உடையவர்களும் இந்த டீயை குடிப்பதால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.