மூச்சுத் திணறல் பிரச்சனையா? ஒரு கைப்பிடி தூதுவளை இலை இருந்தால் போதும்!

0
124

மூச்சுத் திணறல் பிரச்சனையா? ஒரு கைப்பிடி தூதுவளை இலை இருந்தால் போதும்!

பனிக்காலம் இருப்பதினால் ஒரு சிலருக்கு பனி சேராமல் சளி, இரும்பல், மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் மூச்சுத் திணறலை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம் உடலில் அதிகளவு சூடு இருந்தால் ஆக்சிஜன் அதிகளவு தேவைப்படுவதினாலும் இந்த மூச்சு திணறல் ஏற்படுகிறது.மேலும் இவை இதய நோய் ஏற்படுவதற்கும் அறிகுறியாக உள்ளது. நம் உடலில்

நீர்ச்சத்து குறைவாக இருப்பதினால் உடலுக்கு அதிக அளவு நீர் தேவைப்படுவதனால் இந்த மூச்சுத் திணறல் ஏற்படும்.

ஒரு சிலருக்கு வெளியில் சென்று வரும்பொழுது காற்று மாசினாலும் அலர்ஜியினால் மூச்சுத் திணறலாக ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை சரி செய்ய உதவும் பொருட்கள்ஒரு டீஸ்பூன் தூதுவளை இலை பொடி, பனை வெல்லம்.

செய்முறை:ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீர் சிறிது நேரம் கொதித்த உடனே தூதுவளை இலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எடுத்து வைத்துள்ள பனை வெள்ளத்தை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் அளவிற்கு வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவிற்கு குறைந்த பிறகு அதனை எடுத்து ஆற வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது குடிக்க வேண்டும். இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வர மூச்சுத் திணறல் பிரச்சனை சரியாகும்.

மூச்சுத் திணறலை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்து கொள்ள வேண்டும் இல்லையெனில் அவை அவை ஆஸ்துமாவாக மாறிவிடும்.மேலும் தூதுவளை பொடியானது ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது. பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், மயக்கம் போன்றவை சரி செய்யவும் உதவுகிறது.