மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்! 

0
130

மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்! 

முடக்குவாதத்தை போக்கக்கூடிய கீரை என்பதால் இதற்கு முடக்கத்தான் கீரை என பெயர் வந்தது. இது நமது எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு பகுதியை வளர வைக்கும். நரம்புகளை பலப்படுத்தும். இந்தக் கீரையின் முக்கியமான சிறப்பம்சமே நமது உடலில் எங்கெல்லாம் யூரிக் ஆசிட் உள்ளதோ அதை எடுத்துச் சென்று சிறுநீராக வெளியேற்றுகிறது.

வாத நோய்கள் பெரும்பாலும் குளிர்காலங்களில் தான் வருகின்றன. முடக்கத்தான் கீரையை பல வழிகளில் பயன்படுத்தலாம் என்றாலும் இந்த கீரையை வைத்து துவையல் செய்வது எப்படி என பார்ப்போம்.

இதற்கு உபயோகப்படுத்தப்படும் முடக்கத்தான் கீரை புதியதாக இருக்க வேண்டும். ஒரு 20 நிமிடம் நீரில் ஊறவைத்து கழுவவும். இதை ரொம்ப நேரம் வேக வைக்க கூடாது. இரவு நேரங்களில் இந்தக் கீரையை எடுத்துக் கொள்ளவே கூடாது.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து மூன்று வரமிளகாயை சேர்க்கவும். அரை ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெயில் மிளகாயை ஒரு பிரட்டு பிரட்டவும். அடுத்து 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்க்கவும். அடுத்து ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்க்கவும். சுவைக்கு ஒரு சிறிய துண்டு புளி சேர்க்கவும். இவை அனைத்தும் நன்றாக எண்ணெயில் வறுக்க வேண்டும்.

அடுத்து இரண்டு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரைகளை இதில் சேர்க்கவும். பிறகு கீரை நன்றாக சுண்டும் வரை வதக்கவும். இந்தக் கீரையானது உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை இயங்க உதவுகிறது.

* சொறி சிரங்கு உள்ள இடத்தில் முடக்கத்தான் கீரையை பத்து போல போட வேண்டும்.

* கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகளை போக்குகிறது.

வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆற விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் முடக்கத்தான் கீரை துவையலை வைத்து அதன் மேல் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து சாப்பிடலாம். இதன் மூலம் உடல் வலி மூட்டு வலி குணமாகும்.