கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும் நாள்!!

0
224

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும் நாள். ராசிக்குள் சந்திர பகவான் இருப்பதால் அலைச்சல்கள் உண்டாகும். நிதி நிலைமை ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பதால் சமாளித்துக் கொள்வீர்கள். கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் எல்லாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்கும் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்க முயற்சிகள் வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இன்றைய தினம் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு அலைச்சல்கள் உறுதியாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் சற்று ஈடுபாடுடன் செயல்படுவது அவசியம். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் சில பிரச்சனைகள் எழலாம் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியல்வாதிகள் அமைதி காக்க வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் வருவதற்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்!
Next articleபுதினா இலைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here