மூடநம்பிக்கையின் உச்சகட்டம்! சிகிச்சை என்ற பெயரில் பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

0
180

மூடநம்பிக்கையின் உச்சகட்டம்! சிகிச்சை என்ற பெயரில் பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்! 

சிகிச்சை என்ற பெயரில் குழந்தைக்கு பலமுறை சூடு வைத்ததில் அது பரிதாபமாக உயிரிழந்தது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் சாதோலில் நிமோனியாவால் மூன்று மாத பெண் குழந்தை ஒன்று பாதிக்கப்பட்டது. இதற்காக அந்த குழந்தைக்கு சிகிச்சை என்ற பெயரில் பலமுறை சூடான கம்பியால் சூடு வைக்கப்பட்டது. இவ்வாறு 24 முறை சூடு வைத்ததால் அந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுப்பற்றி கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக சாதோல் கலெக்டர் வந்தனா வைத்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இதுபோன்ற மூடநம்பிக்கைகள் நீண்ட காலமாக சாதோலில் நடைபெற்று வருகின்றன. இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நிர்வாகம் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தவிர்க்க முடியாமல் சில சம்பவங்கள் இதுபோன்று நடக்கின்றன. மீண்டும் நிகழாமல் பார்த்துக் கள்வோம். இவற்றை தடுக்க அதிக விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்துவதே ஒரே வழி” என்று கூறினார். 

மேலும் இந்த சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, கூறுகையில், இந்த சம்பவம் குறித்து கவனத்தில் கொண்டதாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ்  அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous articleஎன்ன ஒரு ஒற்றுமை…விஜய்க்கு மட்டுமல்ல, த்ரிஷாவுக்கும் ‘லியோ’ 67-வது படம் தான்!
Next articleஜெய்லர் படத்தில் புதிதாக இணைந்த பாலிவுட் நடிகர்!  அட இவரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்