தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் வந்து சேர ஏற்பாடு!
கடந்த வாரங்களில் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மழை அதிகளவு பெய்தது. அதனை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் மழைக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது குளிர்காலம் தொடங்கி நீடித்து வருகின்றது.தமிழகத்தை பொறுத்தவரை காலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்படுகிறது.
அதனால் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பனிபொழிவு காணப்படுவதால் ரயில்களை பாதுகாப்பாக இயக்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
ரயில் இயக்கத்தில் பயணிகளின் பாதுகாப்பு என்பது மிக முக்கயமான ஒன்றாக உள்ளது. அதனால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் சமயத்தில் ரயில் என்ஜின் முகப்பு பகுதியில் எல்.இ.டி பல்புகள் பொருத்துவது,பணி மூட்டம் நீங்க கருவிகள் பொருத்துவது,மணிக்கு 60 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளபடுகிறது.
இந்த நடைமுறைகளை ரயில் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றோம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரயில்களின் சேவையில் மாற்றம் இருந்தால் பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.