இவரால் தான் செல்வாக்கை இழந்தது இரட்டை இலை!  அமமுக பொதுச் செயலாளர் விளாசல்! 

0
258

இவரால் தான் செல்வாக்கை இழந்தது இரட்டை இலை!  அமமுக பொதுச் செயலாளர் விளாசல்! 

எடப்பாடி பழனிச்சாமியால் தான் இரட்டை இலை தமிழகத்தில் தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

மக்கள் மத்தியில் தற்போது இரட்டை இலைக்கான செல்வாக்கு குறைந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை இரட்டை இலை தனது செல்வாக்கை இழக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரையில் இரட்டை இலை செல்வாக்குடன் இருந்தது. ஆனால் தற்போது செல்வாக்கு இழந்து விட்டது.

மேலும் அவர் பேசுகையில் சின்னம் கிடைக்கவில்லை என்பதால் தான் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடவில்லை. குக்கர் சின்னம் குறித்த விவகாரத்தில் போதுமான நாட்கள் இல்லாததால் நீதிமன்றம் செல்ல இயலவில்லை. மேலும் எங்களை தேர்தலில் நிற்க கூடாது என்று யாரும் நிர்பந்திக்கவில்லை.

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து சுமார் 5000 முதல் 10,000 வாக்குகள் வரையே இபிஎஸ் தரப்பால் பெற முடியும். அவர்களால் வெற்றி பெறவே முடியாது.  அதிமுக தற்போது பிராந்திய கட்சியாக மாறி உள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. இது பற்றி முடிவு செய்யப்பட்டு 12- ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும். என்று அவர் பேசினார்.

 

 

Previous articleபட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த சூப்பர் அப்டேட்! சேமிப்பு திட்டங்களில் திடீர் திருப்பம்!
Next articleபிஎம் கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகளே எச்சரிக்கை! நாளையே கடைசி நாள் முந்துங்கள் இல்லையெனில் பணம் கிடையாது!