தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை உடனே முந்துங்கள்!
கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 பணம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு போன்ற வாக்குறுதிகளை அளித்தது.
எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பயணச்சீட்டு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும் பள்ளிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்குதல் கல்லூரி மாணவிகளுக்கு உயர்கல்வி பெற ஆயிரம் ஊக்கத்தொகை போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்கான தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும்.
இந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் ஒரு லட்ச ரூபாய் வரையில் ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்கள் இதில் விருப்பமுள்ள மாணவர்கள் வரும் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் தங்களின் பெயர்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர்களை அனுப்ப வேண்டிய முகவரி டி ரவிச்சந்திரன் உறுப்பினர் செயலர், மாநில சிறுபான்மையினர் ஆணையம், முதல் தளம், கலச மஹால் பிரதான கட்டணம் சோபாக்கம் சென்னை 60005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அதனுடன் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.