மூட்டு வலியால் அவதியா? ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் காக்கும் அற்புத தைலம்!
ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் உங்களுடைய ஒவ்வொரு மூட்டுகளும் திடகாத்திரமாக இருக்க வேண்டும் எனில் பாட்டி காலத்து இந்த தைலத்தை மட்டும் மூன்று நாட்கள் தேய்த்தால் போதும். இரவு தூங்குவதற்கு முன்னால் எந்த மூட்டு அதிகம் அளிக்கின்றதோ அதில் தடவினால் போதும். இந்த மூட்டு வலி பறந்து விடும். அதற்கு அடுத்து இறப்பு நெருங்கும் வரை உங்களுக்கு மூட்டு வலி என்பதை வரவே வராது.
* முதலில் ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும் விளக்கெண்ணெய் இல்லையெனில் அதற்கு மாற்றாக நல்லெண்ணெய் உபயோகப்படுத்தலாம்.
* அடுத்து இதில் 3 கிராம்பு
* வெந்தயம் 1 ஸ்பூன்
* 3 பூண்டு பற்கள் தோல் உரித்தது
* ஒரு சிறிய துண்டு இஞ்சி தோல் நீக்கியது
* கற்பூரவள்ளி இலைகள் 4 அல்லது ஓமம் ஒரு ஸ்பூன்.
எண்ணெய் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கிராம்பு வெந்தயம் பூண்டு இஞ்சி கற்பூரவள்ளி இலைகள் என அடுத்தடுத்து ஒவ்வொன்றாக சேர்க்கவும். கற்பூரவள்ளி இலையின் நிறம் மாறும் வரை மீடியம் நெருப்பில் அடுப்பை வைத்து காய்ச்சவும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். வெதுவெதுப்பான சூடு இருக்கும் பொழுது கையில் சிறிது எடுத்து நன்றாக கையிலேயே தேய்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.
இது காலில் உள்ள மூட்டு வலிக்கு மட்டுமில்லை. எங்கெங்கெல்லாம் மூட்டு வலி உள்ளதோ அங்கெல்லாம் தடவலாம். இரவு தூங்கும் முன்பு மூன்று நாட்கள் தேய்த்தாலே போதுமானது.