கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! இந்த ஒரு காயை மட்டும் மிஸ் பண்ணாம சாப்பிடுங்கள்!

0
419
#image_title

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! இந்த ஒரு காயை மட்டும் மிஸ் பண்ணாம சாப்பிடுங்கள்!

பொதுவாகவே கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டும் என்றால் நம் உணவில்வெண்டைக்காய் சேர்த்து கொள்ள வேண்டும்.

அதனை தொடர்ந்து இரத்த சோகை, புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு, மூச்சடைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், என அனைத்து விதமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைந்துள்ளது.

வெண்டைக்காயில் உள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்தானது கரையும் தன்மை கொண்டது.அவை கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

போலிக் அமிலம் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்த அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்ததில் உள்ள குழந்தையானது உள்ளே நல்ல முறையில் வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த போலிக் அமிலமானது மிகவும் முக்கியமானதாகும்.

வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பண்புகள் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து, அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதுதவிர மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியவையாக உள்ளது.

Previous articleஅடுத்த அதிர்ச்சியாக இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!
Next articleஹீமோகுளோபின் அதிகரிக்க! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here