வன்னியம் தலித் இவை ஒன்றிணைந்து வளர வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் அதிக அளவில் ஊடுருவும் கஞ்சா விற்பனை ஆகியவற்றை குறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்வரை சந்தித்த பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்துள்ளதாகவும், இது மற்ற எந்த ஒரு சமுதாயத்திற்கும் எதிரானது அல்ல, இது முழுக்க முழுக்க அனைவருக்கும் 100 சதவீதம் சரிசமமாக வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இது கேட்கப்படுகிறது என்று கூறினார்.
தற்பொழுது தமிழகத்தில் தலித், வன்னியம் மற்றும் பிற சமுதாயங்கள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், இவை அனைத்தும் ஒன்றாக வளர்ந்தால் மட்டுமே தமிழகம் நாளடைவில் பெரிய வளர்ச்சி காண முடியும் அந்த வகையில் தற்பொழுது பீகாரை போல சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி சாதிவாரியாக கணக்கெடுப்பு என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் பட்சத்தில், இதன் செயல்கள் பெரிதாக இருப்பினும், இவ்வாறு கணக்கெடுத்து அதன் அடிப்படையில் மாணவர்கள் இளைஞர்கள் என அனைவருக்கும் வேலைவாய்ப்பு கல்வியில் சமமான இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி விரைவில் தர்மபுரி காவேரி உபரி நீர் திட்டம் மற்றும் அரியலூர் பாசன திட்டம் முதலியவற்றை விரைந்து செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்ததாகவும், சமீப காலமாக தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அது போதாத குறையாக தான் உள்ளது.
எனவே அதில் சிறப்பு கவனம் செலுத்தி போதை இல்லா மாநிலமாக உருவாக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். ஒவ்வொரு மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள் என அனைவரிடமும் முதல்வர் ஆலோசனை நடத்தி கட்டாயம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.