வாகன சோதனை செய்த காவலர்! வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபரீதம்! 

Photo of author

By Amutha

வாகன சோதனை செய்த காவலர்! வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபரீதம்! 

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தாக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்று உள்ளது.

சென்னையில் பெருநகர் மற்றும் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் போலீசார் தினமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை  நிறுத்தி எச்சரித்தும், அபராதம் விதித்தும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அயனாவரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த எஸ்.ஐ. சங்கர் மீது இருந்தவர்கள் இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். எஸ்.ஐ.சங்கர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது ஒரு பைக் மிகவும் வேகமாக வந்தது. எனவே சங்கர் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் திடீரென எஸ்.ஐ.சங்கரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்படவே அவர் நிலைகுலைந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தப்பி சென்றனர்.

இதில் காயம் அடைந்த எஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் தப்பி ஓடிய மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையில் இருந்த காவலர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.