Breaking: மக்களே உஷார்!! ரூ 5 லட்சம் வரை அபராதம்.. சென்னை வாசிகளுக்கு மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை!!
சென்னை மாநகராட்சி தற்போது மக்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது, அதில். மழை நீர்க்காக கட்டப்பட்டுள்ள வடிகால்களில் பலர் விதிமுறைகளை மீறி தங்களது கழிவுநீர் இணைத்துள்ளதாகவும் அதனை உடனடியாக அகற்றாவிட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இது சென்னை மாநகராட்சிக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் கடல் மட்டத்திற்கு இரண்டு மீட்டர் மேலே மட்டுமே நிலத்தின் மட்டம் உள்ளதால் விரைவிலேயே மழை நீர்கள் சாலை மற்றும் வீடுகளில் புகுந்து விடுகின்றது.
இதனால் மக்கள் பெரும் அளவு அவதிப்படும் நிலையில் இதனை தடுக்க கிட்டத்தட்ட 30 கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வடிகால்கள் ஆனது சாலையின் மட்டத்திலிருந்து ஆறு அடி உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள நிலையில் இதனுடன் கழுநீர் வடிகால்களையும் இணைத்துள்ளதால் மழைநீர் போக முடியாமல் அடைத்துக் கொள்கிறது.
மழைக்காலங்களில் இவ்வாறு மழைநீர் போக முடியாமல் அடைத்துக் கொள்வதால் மக்கள் பெரிதளவில் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சென்னை மாநகராட்சியில் விதிகளை மீறி மழை நீர் வடிகால்களில் கழிவு நீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எனவே அதனை மக்களை உடனடியாக அந்த இணைப்பை துண்டிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீறி கள ஆய்வில் ஏதேனும் மழை நீர் வடிக்காலுடன் கழிவுநீர் வெளியேறுவதை கண்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். தற்பொழுது வரை ரூ.5,09,500 வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.