இளநரை உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்கும் கருவேப்பிலை! 

0
344
#image_title

 இளநரை உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்கும் கருவேப்பிலை! 

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் E… இப்படி பல்வேறு சத்துக்கள் உள்ளன.

இந்த கறிவேப்பிலையை பெரும்பாலான வீட்டுல எல்லாரும் தாளிக்கறதுக்கும் நறுமணத்துக்காகவும் மட்டும்தான் பயன்படுத்துறோம். ஆனா இதை உணவுல தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தா, நல்ல ஆரோக்கிய பலன்களைக் கொடுக்கும்.

1.கருவேப்பிலையை மிளகு, சீரகம் சேர்த்து அரைச்சு பொடி செஞ்சு சாதத்துல சேர்த்து சாப்பிடலாம். கருவேப்பிலையை துவையலா அரைச்சும் சாப்பிடலாம். இதனால வயிற்றுப்போக்கு,மலக்கட்டு சரியாகுது, செரியாமை, பித்தம் போன்ற பிரச்சனைகளும் குணமாகும். பசியை தூண்டுறதோட, பித்தவாந்தி சரியாகவும் இது உதவுது.

2. இதோட இலை, வேர், பட்டை இந்த மூனுலயுமே மருத்துவ குணம் இருக்கு. இலை, பட்டை, வேரை எடுத்து தண்ணியில போட்டு அந்த நீரை குடிச்சிட்டு வந்தா வயிற்றுவலி குணமாகும்.

3. கறிவேப்பிலையை அரைச்சு வடிகட்டி ஜூஸாவும் தினமும் காலையில குடிச்சிட்டு வரலாம். ரத்தம் சுத்தமாகி உடலானது ஆரோக்கியமாகவும் இருக்கும்.

4. கறிவேப்பிலை இலைகளை நிழலில் உலர்த்தி, அதோடு மிளகு, சீரகம், சுக்கு சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து, சாதத்தில் நெய்யுடன் பிசைந்து சாப்பிடலாம்.

5.  இப்போது எல்லாம் இளைஞர்கள் கிட்ட இளநரை பெரிய பிரச்சனையா இருக்கு. நம்ம தலைமுடி நரைத்து விடாமல் பாதுகாக்க கருவேப்பிலை உதவுது. நாம தினமும் தேவையான அளவு கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தா, நரைமுடி பிரச்சனையை தடுக்க முடியும். அதுமட்டுமில்லாமல், முடி கொட்டுறது மாதிரி பலவிதமான தலைமுடி
பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுது இந்த கறிவேப்பிலை. இதுக்கு நாம தினசரி உணவில கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்வதோடு, தேங்காய் எண்ணெயோட கருவேப்பிலையை சேர்த்து காய்ச்சி அதை தலைக்கு தடவியும் வரலாம்.

6. கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது. கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது.

Previous articleமாதவிடாய் பிரச்சனைகள்!  சில சிம்பிள் வைத்திய முறைகள்!  
Next articleதுருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 3 பேர் பலி, 1000 த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்!