மாதவிடாய் பிரச்சனைகள்!  சில சிம்பிள் வைத்திய முறைகள்!  

0
205
#image_title

மாதவிடாய் பிரச்சனைகள்!  சில சிம்பிள் வைத்திய முறைகள்!  

ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலம் மாதவிடாய் நாட்களோடுதான் பயணிக்கிறார்கள். அவ்வபோது அதிக ரத்தபோக்கு, குறைவான ரத்தபோக்கு, அதிக வலி என்று சந்திப்பது இயல்பானது தான்.

மாதவிடாய் சரியாக ஏற்படவில்லை என்பதற்கு பல விதமான காரணங்கள் இருக்கின்றன. உடலில் ரத்த அணுக்கள் குறைபாடு, ஹீமோகுளோபின் குறைபாடு, பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், உடல் எடை அதிகரிப்பு, ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்று பல காரணங்கள் உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்தலாம்.

இதோ மாதவிடாய் பிரச்சனைகளுக்கான சில சிம்பிள் வைத்திய முறைகள்:

1. 5 கிராம் கொத்தமல்லியை 150 ml தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை குடித்தால் மாதவிடாய் நாட்கள் சீராகும். இதேபோல் சீரகத்தையும் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

2. பப்பாளி : இந்த பழம் கருப்பையைத் தூண்டி மாதவிடாய் வருவதற்கு உதவும். பப்பாளியை அப்படியே உண்டால் ஈஸ்ட்ரோஜின் ஹார்மோனைத் தூண்டு மாதவிடாயைத் தூண்டும்.

3. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால், வாழைப் பழத்துடன் ஏலக்காய்ப் பொடி சேர்த்து சாப்பிடவும். அல்லது செம்பருத்திப் பூவை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர ரத்தப் போக்கு கட்டுப்படும்.

4. அசோக மரத்தோட பட்டையோட பசும்பாலும் தண்ணியும் சேர்த்து சாறெடுத்து தினமும் குடித்து வந்தால் குருதிப் போக்கு நின்னு மாதவிடாய் சுழற்சி சீராகும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

5. புதினா இலையின் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து குடிக்க மாதவிலக்கு ஒழுங்குபடும்.

6. மலைவேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாத விடாய் காலத்தில் 3 நாள் சாப்பிட மாதவிடாய் வலி மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும்.