இனி கண்ணாடி போடத் தேவையில்லை! இதோ அதற்கான தீர்வு!
கண்பார்வை அதிகரிக்கச் செய்யும் ஒரு சில வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
தற்போது உள்ள சூழலில் இளம் வயது முதல் பெரியவர்கள் வரை கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. நீண்ட நேரம் மொபைல் போன் அல்லது டிவி போன்றவற்றை பார்ப்பதன் காரணமாக கண் பார்வை திறன் குறையும். இதன் விளைவாக கண்ணாடிகள் அணிந்து கொள்கிறார்கள்.
மேலும் மருத்துவமனைகளை தேடிச் செல்கின்றனர்.ஆனால் ஒரு சில பொருட்களை வைத்து கண் பார்வை திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனை பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.
காலை நேரங்களில் கண்களுக்கு சிறிது பயிற்சி அளிக்க வேண்டும்.அவை எவ்வாறென்றால் கண் விழிகள் இடப்பக்கம், வலப்பக்கம் என்று சிறிது நேரம் பார்க்க வேண்டும் மற்றும் மேல் கீழ் என்று பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் காரணமாக கண்களில் சீரான ரத்த ஓட்டம் செயல்பட்டு பார்வை திறன் குறைவதை சரி செய்து கொள்ள முடியும்.
காலை நேரங்களில் சூரியன் உதிக்கும் பொழுது சிறிது நேரம் பார்க்க வேண்டும். அதேபோன்று மாலையில் சூரியன் இறங்கும் பொழுது சிறிது நேரம் பார்க்க வேண்டும் இவ்வாறு செய்வதன் காரணமாக கண்களின் பார்வை திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். நம் உடலுக்கும் வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கும்.
கண்களில் ஏற்படும் வறட்சியின் காரணமாக பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்து கொள்ள வெள்ளரிக்காய்களை சிறிதாக வெட்டி அதன் பிறகு கண்களில் வைக்க வேண்டும். இதனை சிறிது நேரம் வைத்த பிறகு கண்களின் வறட்சியை தடுக்க மிகவும் உதவுகிறது இவ்வாறு செய்வதன் காரணமாக கண் பார்வை திறனை அதிகரித்துக் கொள்ளலாம்.