போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ!

0
525
#image_title

போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ!

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த ரவுடி பெண்டு சூர்யா போலீசாரை தாக்கிவிட்டு தப்பித்து செல்ல முயன்ற போது பெண் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார். அயனாவரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சங்கரை 4 பேர் கொண்ட கும்பல் கம்பியால் தாக்கி விட்டு தப்பித்து சென்றனர்.

பைக்கில் தப்பி ஓடிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் ரவுடி பெண்டு சூர்யா என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த சூர்யாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அயனாவரம் நியூ ஆவடி சாலை அருகே ரவுடி பெண்டு சூர்யா திடீரென கத்தியால் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.

கத்திக்குத்தில் காவலர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். தப்பியோடிய ரவுடி பெண்டு சூர்யாவை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் மீனா முழங்காலில் சுட்டு பிடித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி பெண்டு சூர்யாவுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்யவும்!
Next articleஆர்சிபி என்று சொல்லாதீர்கள் இந்தியா என்று சொல்லுங்கள்! இந்திய வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here