உங்க கிட்னிகளை கிளீன் பண்ணுங்க! எளிமையான முறையில்!
சரியான உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு முறையைப் பின்பற்றி வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அதோடு, உடல் உறுப்புகள் பாதிப்படைவதையும் தவிர்க்கலாம். நம் உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றுதான் சிறுநீரகம். உங்களுடைய சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
சிறுநீரகத்தின் வேலை ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றுவது தான். ஆனா வெயில் காலத்துல உடம்பில் இருக்குற நீரெல்லாம் வியர்வையாகவே ஆவியாகிறது. இதனால் உப்புகள் எல்லாம் சிறுநீரகத்தில் தங்குகிறது இதனால்தான் கல் உருவாகிறது.
நமது இரத்ததில் உள்ள உப்புச் சத்து மற்றும் தேவையற்ற பாக்டீரியா நுழைவதை தடுக்கும். இங்கே மிகவும் எளிமையாக கிடைக்ககூடிய கொத்தமல்லியை கொண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க முடியும்.
சிறுநீரகத்தை மிக எளிதான முறையில் எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
தேவையானவை:
1. கொத்தமல்லி தழை – கைப்பிடி அளவு
2. சீரகம் – அரை ஸ்பூன்
3. எலுமிச்சை சாறு – அரை மூடி அளவு
4. தண்ணீர் – ஒன்றரை டம்ளர்
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி மேற்கண்ட பொருட்களை அதில் போட்டு கொதிக்க விடவும். பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஆறவிட்டு குடிக்கவும்.
தினசரி காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகம் அதன் பாதைகள் சுத்தப்படுத்தப்படும். மூன்று நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் இவ்வாறு குறித்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வரவே வராது.