தொப்பையை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? இதோ உங்களுக்கான வழி! 

0
207
#image_title

தொப்பையை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? இதோ உங்களுக்கான வழி! 

தற்போது பலரையும் வாட்டும் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். உடல் எடை அளவுக்கு மீறிப் போனால் நமக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.

 மேலும் கார்டியோவாஸ்குலர் நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, வாதம், எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல நோய்களுக்கும், மன ரீதியான பல்வேறு நிலைகளுக்கும் உடல் பருமன் முக்கியமான காரணமாக இருக்கிறது. உடல் எடையை சுலபமான முறையில் குறைக்க உதவும் ஒரு எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. மிளகு – 10

2. பட்டை – சிறிய துண்டு

3. இஞ்சி – சிறிது

4. மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொள்ளவும். அதில்  மிளகை தட்டி போடவும். அடுத்து ஒரு சிறிய துண்டு பட்டை, அரை ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்க்கவும். அடுத்த கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். இதை இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இதில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களும் உடல் எடையை வேகமாக குறைய வைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. கொதித்ததும் இறக்கி சிறிது ஆற விடவும். குடிக்கிற பக்குவம் வந்ததும் இதை ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும்.

இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கலாம். இதை சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்தோ தினமும் ஒருவேளை குடித்து வர வேண்டும். இதன் மூலம் உங்கள் உடல் எடையில் நல்லதொரு மாற்றத்தை காணலாம்.

இதில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களும் உஷ்ணத்தை அதிகரிக்க கூடிய பொருட்கள். எனவே கர்ப்பமாக இருப்பவர்களும், வயிற்றுப்புண் பிரச்சினை உள்ளவர்களும் இதை தவிர்க்க வேண்டும்.

Previous articleமீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் தைரியமும் உண்டாகும் நாள்!!
Next articleகால் வலியால் மிகவும் அவதிப்படுகின்றீர்களா? இதை தடவிய சில மணி நேரங்களில் வலி பறந்து போகும்!