எலும்புகளும் தசைகளும் வலிமை பெற! இந்த ஒரு பயிற்சி போதும்!

0
284
#image_title

எலும்புகளும் தசைகளும் வலிமை பெற! இந்த ஒரு பயிற்சி போதும்!

நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்.இன்றைய வாழ்வில் நடை பயிற்சி என்பது அனைவருமே செய்தே ஆக வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சி முறையாகும்.

உடல் உழைப்பிற்கு வாய்ப்பே இல்லாதவர்கள் தினமும் அரை மணி நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகிறது.வாரத்தில் குறைந்தது மூன்று மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன.

நமது மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் அனைத்தையுமே புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் ஒரு அற்புதமான பயிற்சி நடைப்பயிற்சி ஆகும்.நடைப்பயிற்சி என்பது உன் உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தையும், பிராணவாயு சேரிவையும் உண்டாக்கி சிறப்பாக நம்மை செயல்பட வைக்கிறது.

ஒருவர் வெளியே சூரிய ஒளி படும் அளவு நடக்கும் போது அவருக்கு விட்டமின் பி கிடைக்கிறது.ஒருவர் செய்யும் நடை பயிற்சி ஆனது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

சிறு வயதுடன் கூடிய நடை பயிற்சி என்பது முதுமையை தள்ளி போடும் ஆற்றல் கொண்டது. இளம் வயதில் மேற்கொள்ளக்கூடிய நடை பயிற்சியானது. முதுமையிலும் அவர்களின் இதயம் சரிவர இயங்குவதாகவும். இதயம் சுருங்கி விரியும் தன்மையும் இயல்பாக இருக்கும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க தினமும் தவறாமல் நடை பயிற்சி செய்வது அவசியமாகிறது.மேலும் நடைப்பயிற்சி செய்யும் பொழுது நுரையீரலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமையை கொடுக்கிறது.

Previous articleசர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்! எச்சரிக்கை உடனே தீர்வு காண வேண்டும்!
Next articleமேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தட்டுப்பாடுகள் அகலும் நாள்!!