தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய கட்டுப்பாடுகள்!

0
315
Jallikattu, the heroic game of Tamil! Important restrictions issued by the Tamil Nadu government!
Jallikattu, the heroic game of Tamil! Important restrictions issued by the Tamil Nadu government!

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது ஜல்லிக்கட்டு. இந்தப் போட்டியினை எதிர்த்து பீட்டா அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மெரினா கடற்கரையில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தினார்கள்.

அந்த போராட்டத்தின் இறுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மேலும் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடாத காரணத்தினால் ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் இருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பிப்ரவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது அதனால் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியின் ஏற்பாடுகளுக்கு அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் போட்டியின் போது மாடு பிடி வீரர் அல்லது பார்வையாளர்களில்  யாராவது உயிரிழந்தால் அல்லது காயம் அடைந்தால் அல்லது  நிரந்தர ஊனம் போன்ற பிரச்சனை ஏற்பட்டாலோ அவர்களுக்கு 5 லட்சம் வரை காப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த காப்பீட்டு வழங்கப்படுவதை ஏற்பாட்டாளர் உறுதி செய்ய வேண்டும் எனவும் காப்பீடு வழங்கினால் மட்டுமே போட்டியை நடத்த அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

Previous articleஇந்தத் தேர்வின் தேதியில் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்!
Next articleதனியார் பேருந்து இயக்க திட்டம்! மாணவர்களுக்கு வழங்கும் இலவச பஸ்பாஸ் பாதிக்கப்படும்?