ஆமா நான் பிஸ்கோத்துதான்:இயக்குனர் கண்ணனோடு கைகோர்த்த சந்தானம்!

0
210

ஆமா நான் பிஸ்கோத்துதான்:இயக்குனர் கண்ணனோடு கைகோர்த்த சந்தானம்!

சந்தானம் ஜெயம் கொண்டான், கண்டென் காதலை அகிய படங்களின் இயக்குனர் ஆர் கண்ணனுடன் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

2004 ஆம் ஆண்டு மன்மதன் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான சந்தானம் வடிவேலுவின் திரையுலக விலகலுக்குப் பின் உச்சநட்சத்திரமாக மாறினார். அதன் பின் தொலைக்காட்சியில் இருந்து வந்த சிவகார்த்திகேயனின் வெற்றியைப் பார்த்து தானும் ஹீரோ அரிதாரம் பூசினார். ஆரம்பத்தில் அவர் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும் ஆக்‌ஷன் ரூட்டில் அவர் இறங்கிய படங்களான வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் போன்ற படங்கள் சறுக்கின. அதனால் சந்தானம் சறுக்கி விட்டாரோ என்று நினைத்து வேளையில் தில்லுக்கு துட்டு 1,2 , ஏ 1 ஆகிய படங்களின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார்.

ஆமா நான் பிஸ்கோத்துதான்:இயக்குனர் கண்ணனோடு கைகோர்த்த சந்தானம்!

இந்நிலையில் இப்போது சந்தானம் மீண்டும் வரிசையாக படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்த வரிசையில் ஏ1 பட இயக்குனருடன் மீண்டும் ஒரு படத்தில் ஒப்பந்தமான அவர் இப்போது இயக்குனர் அர் கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் பிஸ்கோத் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடித்த கண்டேன் காதலை மற்றும் வந்தான் வென்றான் ஆகிய படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவை. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்துக்கு அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைக்கிறார்.

தனது படங்களுக்கு வித்தியாசமாகவும் கெத்தாகவும் பெயர் வைப்பவர் சந்தானம். தில்லுக்கு துட்டு, டகால்டி, ஏ1 போன்ற வித்தியாசமானப் பெயர்களை அடுத்து இப்போது இந்த படத்துக்கு பிஸ்கோத்து எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Previous articleஅதிமுகவுக்கு எதிராக திருமாவளவன் தொடுத்த வழக்கு: அதிரடி தீர்ப்பு
Next articleசம்பளத்தை எல்லாம் தாரை வார்க்கும் இந்திய வீரர்கள்:பின்னணி என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here