பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.
மேலும் போட்டித் தேர்வுகளும் நடத்தப்பட்டது நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு இம்மாதம் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. மேலும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 13 ஆம் தேதியும், 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 14ஆம் தேதியும் தொடங்கி தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
அந்த தேர்வினை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. தேர்வுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வு தேதி விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளியை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி மின்வாரிய துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் மாத மின் நிறுத்தம் மற்றும் இடையில் மின் நிறுத்துவது போன்றவை ஏற்படாது என அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி 12 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வுகளில் மொழிபாடங்களில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கும் மற்றும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் வரும் ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் அதில் மாணவர்கள் தேர்ச்சி பெற சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.