தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு இங்கு இன்று ரயில் சேவை கிடையாது!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது.
ஆனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் அதனால் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் ஏற்படும் என அச்சமடைந்து பெரும்பாலானோர் ரயில் சேவையை விரும்பினார்கள்.
அதனால் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. பண்டிகை நாட்கள் ,தொடர் விடுமுறை நாட்களில் அனைத்து இடங்களுக்கும் கூடுதல் ரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது, இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிவிப்பில் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் இன்று மார்ச் 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளத்தில் திருவனந்தபுரத்திற்கு தினந்தோறும் இரவு 7.45 மணிக்கு இயக்கப்பட்டு வரும் ரயில் இன்று திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு மறுமார்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு தினந்தோறும் மாலை 3 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ரயில் நாளை திருச்சூரில் இருந்து இரவு 8:43 மணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்கு வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.