பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!! 

0
219
#image_title

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!!

நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான போராட்ட குழு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு.பாலசுப்பிரமணியன் அறிவிப்பு.

படக்காட்சிகள்; ஆலோசனை கூட்டம், சிறப்பு தலைவர், அரசு பணியாளர்கள்.

பேட்டி;கு.பாலசுப்பிரமணியன்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர்.

நாகையில் இன்று மாநில அளவிலான அரசு பணியாளர் சங்க போராட்டக் குழு பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அரசு பணியாளர்கள் மற்றும் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் கூறிய தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர், கு.பாலசுப்பிரமணியன், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறக்கூடிய தூய்மை காவலர்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் காலம்முறை ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 19,ஆம் தேதி சென்னையில் அரசு பணியாளர் சங்கத்தினர் 1, லட்சம் பேர் பேரணியில் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.

மேலும் நாகை மாவட்ட கூட்டுறவுத்துறை நியமனத்தில் பட்டியலின பணியாளர்கள் மீது பாகுபாடு காட்டும், மாவட்ட இணை பதிவாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய கு.பாலசுப்பிரமணியன், தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு பாதிப்புக்கு உள்ளான பட்டியலின பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரத்தை கண்டித்து, வரும் 12,ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleவீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் விழா!! போலீசார் அனுமதி மறுப்பு!!
Next articleநள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!!