மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 25 ஆயிரமாக உயர்த்த அமைச்சர் அறிவிப்பு

0
185

மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 25 ஆயிரமாக உயர்த்த அமைச்சர் அறிவிப்பு

மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மீன்வளத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடையும் நிகழ்வில், அவர்களின் குடும்பத்திற்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும் கடலில் மீன்ப்டிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரம் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் 40 ஆயிரம் உயிர்பாதுகாப்பு சட்டைகள் 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும் என அறிவித்தார்.

Previous articleஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக நீதிமன்றம் வேதனை
Next articleமீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்