கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அலுவலர்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு 

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அலுவலர்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு

கொரோனா தொற்று சென்னையில் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதிக்கப்படுபவர்களுக்கு பின்பற்றப்படும் அரசின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்ற சுகாதார அலுவலர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்.

தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்கள் வெளியில் நடமாடாமல் வீட்டில் தனிமையில் இருப்பதவை உறுதி செய்யவும், அவர்களின் வீட்டின் முன் நோட்டிஸ் ஒட்டவும் மாநகராட்சி அறிவுறுத்தல்.

மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமை படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்.

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் கணிசமான அளவில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவையான அளவில் மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழ்நாட்டில் திரையரங்குகள், சந்தைகள், மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மக்கள் தாமாக முக கவசம் அணிந்து தொற்று பரவாமல் தற்காத்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையிலும் கணிசமான அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகள் கொடுத்துள்ள வழிகாட்டுதலை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

பொது இடங்களில் கூடும் போது பொதுமக்கள் முக கவசம் அணித்துக்கொள்ள வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது அதற்கான அறிகுறி இருந்தால் முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து சிகிச்சை எடுப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், தொற்று பாதிக்கப்படுபவர் இல்லத்தின் வாயிலில் தொற்று பாதிக்கப்பட்டதற்கான நோட்டீஸ் ஓட்ட வேண்டும். அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்து வெளியே செல்லாமல் பார்த்த் கொள்ள வேண்டும் என அலுவலர்களை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.