கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!! ஒரே நாளில் 1801 பேருக்கு பாதிப்பு உறுதி!! 

0
317
#image_title

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!! ஒரே நாளில் 1801 பேருக்கு பாதிப்பு உறுதி!!

கேரளா மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று சனிக்கிழமை ஒரு நாளில் 1801 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .திருவனந்தபுரம் ,எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான முடிவுகள் Omicron என்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த நோயாளிகளில் 0.8 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்பட்டன, மேலும் 1.2 சதவீதம் பேருக்கு மட்டுமே ICU படுக்கைகள் தேவைப்பட்டன. பெரும்பாலானவை.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மாதிரி ஓத்திகை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.மேலும் சிறுவர்,சிறுமிகள் முதியவர்கள் ,கர்ப்பிணிகள் ,நீரழிவு நோய் உள்ளவர்,வாழ்க்கை முறை நோயாளிகள் கட்டாயம் முக கவசம் அணிய சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனைக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் மேலும் மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் போதுமான கொரோனா மதிப்பாய்வு செய்யவும், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவமனைகளில் தேவையான ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Previous articleசென்னை மாநகராட்சி பகுதிகளில் அமர்களமாக நடைபெறும் ஏரியா சபை கூட்டங்கள்!!
Next articleஅதிக வட்டி தருவதாக கூறி 6000 கோடி ரூபாய் மோசடி! IFSன் முக்கிய தரகர் கைது!