கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல வீதியில் இயங்கி வரும் பேங்கில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிப்பு!!

0
357
#image_title

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல வீதியில் இயங்கி வரும் பேங்கில் கள்ள நோட்டுகள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள முடசல் ஓடை மீனவ கிராம பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பில் டீசல் பங்க் இயங்கி வருகிறது. அந்த வங்கியில் அப்பகுதியில் உள்ள படகுகளுக்கு டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்த சுதாகர் வயது 51 மற்றும் பண்ருட்டி ரெட்டியார் பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் செல்வகுமார் வயசு 37 ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று முன்தின வரை மூன்று நாட்கள் பஸ்ஸிலான 6,4 356 ரூபாயை செல்வகுமார் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் கணக்கில் செலுத்துமாறு நேற்று முன் தினம் இரவு கூறி உள்ளார்.

இதை அடுத்து சுதாகர் நேற்று காலை சிதம்பரம் மேல வீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணத்தை செலுத்துவதற்காக சென்று உள்ளார். அப்போது அவர் வங்கி காசாளரிடம் சில ஐநூறு ரூபாய் நோட்டு கட்டுகளை கொடுத்துள்ளார்.

அந்த கட்டுக்களை காசாளர் வாங்கி எண்ணிப் பார்த்த பொழுது அதில் 500 ரூபாய் நோட்டு கட்டு முழுவதும் கள்ள நோட்டுகளாக இருந்து உள்ளன. சில கட்டுகளில் இடையே கள்ள நோட்டுகள் இருந்துள்ளன. அதன்படி மொத்தம் 52 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன.

இதைப் பற்றி அறிந்த வங்கி மேலாளர் வீரபத்திரன் சுதாகரிடம் பணம் எப்படி வந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னுடன் வேலை பார்க்கும் செல்வகுமார் கொடுத்ததாக தெரிவித்தார்.

பின்னர் அவரையே வங்கிக்கு வரவழைத்தார் தொடர்ந்து இதைக் குறித்து சிதம்பர நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பெயரில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் போலீசார் வங்கிக்கு விரைந்து சென்று இரண்டு பேரையும் கைது செய்து சிதம்பர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கள்ள நோட்டுக்கள் எப்படி கிடைத்தது என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Previous articleஇருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வசூல்வேட்டை! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை!!
Next articleகுடிநீரில் கடல்நீர் கலக்கும் அவலம்.. அதிமுக திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விடியா அரசு!! களத்தில் இறங்கும் பொதுமக்கள்!!