ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலை யாத்தூர் கிராமத்தில் வெள்ளாறு மணிமுத்தாறு ஆகாய கங்கை மூன்றும் சங்கமிக்கும் என சொல்ல கூடிய திருக்கூகூடலையற்றூர் என அழைக்கப்பட்டது.
இத்திருத்தலம் சுந்தரமூர்த்தி நாயன்மார் ,அருணகிரிநாதர் ஆகியோர்களால் பாதம் பட்ட தலம்.
சுந்தரர் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வந்த நிலையில் இறுதியாக சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் என்று சொல்லக்கூடிய திருமுதக்குன்றம் சென்ற பொழுது
கூடலையாற்றூர் வழியாக செல்லும் போது இத்திருதலத்தில் நெறிக்காட்டுநாதர்
புறிக்குழல் சுந்தரி சுந்தரருக்கு காட்சி கொடுத்து அருளினார்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி#News4Tamil pic.twitter.com/x3w1s8tTnt
— News4 Tamil (@News4TamilTN) April 14, 2023
அதோடு தினகரன் மன்னர் போர் புரிந்துவிட்டு கூடலையாற்றூர் வழியாக சென்று கொண்டு இருந்த பொழுது தொண்டை மண்டலம் என்று சொல்லக்கூடிய காஞ்சிபுரம் மாவட்டம் தினகரன் மன்னருக்கு குழந்தை பாக்கியம் இல்லையாம் இதனால் தனக்கு குழந்தை பாக்கியம் இருந்தால் இந்த கோயிலை நான் கட்டித் தருவதாக ஒரு வேண்டுதலும் உண்டு அதேபோல் குழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் இந்த கோயிலை கட்டினார்.
மன்னர் அப்பொழுது அறிவுபூர்வமாக சித்திரை மாதம் ஒன்று இரண்டு மூன்று தேதிகளில் நேராக சூரிய ஒளி மூலவர் மீது படும் அளவிற்கு மிகவும் தத்ரூபமாக கட்டிக் கொடுத்துள்ளார். அதோடு சூரிய ஒளி விழக்கூடிய கோயில் அது திருக்கூடலையாற்றூர் திருத்தலம் என அழைக்கப்படுகிறது.இதனால் வெளியூர் வெளிமாநிலத்தவர் வருடத்தில் மூன்று நாள் இக்கோயிலுக்கு வந்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம் இதனால் தங்களது வேண்டுதல், விவசாயம், செய்யம் தொழில் அதோடு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதாக இங்குள்ள பக்தர்கள் கூறி வருகின்றனர்
குறிப்பு ;
இந்த சன்னதியில் நவகிரக சன்னதி கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது