திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!!

Photo of author

By Vijay

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!!

Vijay

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!!

அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் பன்னீர் தரப்பினர் கடும் விமர்சனங்களை அவர் மீது அள்ளி தெளித்து வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு பன்னீரின் அரசியல் நகர்வுகளை கவனித்து வருகிறார்.

 அதிமுகவில் இருந்து தன்னை வெளியேற்றியதால் எடப்பாடிக்கு எதிராக ஒரு மாபெரும் பொது கூட்டத்தை கூட்ட தனது அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரனுடன் கலந்து ஆலோசித்து திருச்சியில் வரும் 24ம் தேதி மாநாடு நடத்த முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், மாநாட்டிற்கு சசிகலாவை அழைப்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும் என கூறி வந்தார் பன்னீர்செல்வம்.

இதனிடையே இன்று சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருடன் ஆலோசனை செய்து மாநாட்டிற்கு சசிகலாவை அழைப்பது பற்றி முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன, இது தொடர்பாக நேற்று சசிகலா கூறுகையில் முதலில் அவர்கள் அழைப்பு விடுக்கட்டும் பிறகு அதை பற்றி யோசிப்பேன் என சசிகலா கூறியது அரசியல் வல்லுனர்களால் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

மேலும் எடப்பாடிக்கு எதிராக கூட்டப்படுகின்ற இந்த கூட்டத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்துவது என கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகளில் அடுத்த வாரம் முதல் ஓபிஎஸ் அணியினர் ஈடுபட உள்ளனர் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.