கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி! 

0
219
#image_title
கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி! 
தமிழ் சினிமாவில் 1976-ம் ஆண்டிற்கு முன்னாள் திரைப்பட பாடல்கள் என்பது சிறிதளவே ஒலித்து கொண்டிருந்த நிலையில், மதுரை பண்ணபுரத்தில் இருந்து திரைப்பட இசை வாய்ப்பினை தேடி சகோதரர்கள் சிலர் சென்னை வந்தனர். பல இடங்களில் இசை வாய்ப்பு தேடியும் கிடைக்கவில்லை என்றாலும் மனம் தளராமல் தன்னுடைய தொடர் முயற்சியால் தன்னுடைய நெருங்கிய நண்பரான பஞ்சு அருணாசலத்தின் உதவியால் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசை தென்றலாய் தமிழகத்தில் வீச தொடங்கிய தென்றலின் பெயர் தான் இளையராஜா.
1976 ஆண்டுக்கு பின் தன்னுடைய திறமையான இசையினால் ஓய்வு எடுப்பதற்கு கூட நேரம் இல்லாத அளவிற்கு திரைப்படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார் இளையராஜா. இவரின் இசை பயணத்தில் உதவியாகவும், உறுதுணையாகவும் இவரது சகோதரர்களான கங்கை அமரன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்.
இளையராஜா தன்னுடைய இசை திறமையால் தேசிய அளவில் தமிழ் சினிமாவை புகழ் பெற வைத்தவர் என்றால் அது மிகையாகாது. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் பல இசை கச்சேரிகளையும் நடத்தி அதிலும் தன் திறமைகளை நிறுபித்து புகழின் உச்சிக்கே சென்றார். இவர் எந்தளவிற்கு இசையில் வல்லவரோ அந்தளவிற்கு மிகவும் கோபக்காரராகவும் இருந்துள்ளார்.
ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இளையராஜா நான்கு முறை இசைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இவரின் இசை நுணுக்கத்தை பாராட்டி பல இசை பிரபலங்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள், அரசியல் வாதிகள் என பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
தன்னுடைய இசை திறமையால் பலரையும் கட்டி போட்ட இளையராஜா, மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு தான் நடந்து கொள்வார் என அவருடன் பணியாற்றிய பலர் கூறியுள்ளனர். ஒரு முறை தன்னுடைய இளைய சகோதரரான கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இவர் இருந்துள்ளார் என்ற செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்கை அமரன் ஒரு முறை தன்னுடைய நெருங்கிய நண்பரான மலேசியா வாசுதேவன் தனது சொந்த தயாரிப்பில் படம் ஒன்றை தயாரித்து அதில் அவரே கதாநாயகனாக நடிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த படத்திற்கு இளையராஜா தான் இசை அமைக்க வேண்டும் என கங்கை அமரன் கூற  மலேசியா வாசுதேவன் மறுத்துள்ளார்.
இதனிடையே அப்படத்திற்கு கங்கை அமரனை இசை அமைக்க வைக்க அவரிடம் சம்மதம் வாங்கி ஒப்பந்தம் போடப்பட்டது. இது குறித்து தகவலறிந்த இளையராஜா கங்கை அமரனை என்னப்பா தனியாக இசை அமைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாயா? இசையை பற்றி உனக்கு என்ன தெரியும்? என இசையமைக்க வந்துவிட்டாய் என கூறி கிட்டாரை எடுத்துக் கொண்டு ஓடி விடு மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட இளையராஜாவின் குருநாதர் வெங்கடேசனுக்கு தெரியவர அவர் இளையராஜாவை சமாதானம் செய்து வைத்தார். இதன் பின்னர் ஒரு வழியாக கங்கை அமரன் அந்த படத்திற்கு இசை அமைக்க படமும் வெற்றிகரமாக ஓடியது. தனது சொந்த தம்பியின் வளர்ச்சியை இளையராஜா பொறுத்து கொள்ளாமல் அவரை விரட்டி அடித்த சம்பவம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous articleதிமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா? 
Next articleபள்ளிப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு! விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரம்!