கோலாகலமாக கொண்டாடப்பட்ட – ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா!
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் புகழ்பெற்ற ஒன்று , வருடந்தோறும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டும் சித்திரை பெருக்கை முன்னிட்டு, . திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் இன்று காலை தேரோட்ட திருவிழா தொடங்கியது.
அதில் கலந்து கொண்ட பக்தர்களும் தேரை இழுத்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக 500 க்கும் மேற்பட்ட போலீஸ், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடைக்காலம் என்பதால், சுற்றிலும் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தேரை இழுக்கும் பக்தர்கள், மிகவும் பக்தி பரவசத்துடம் கோசம் இட்டு இழுப்பதால் காண்போரையும், மெய் சிலிர்க்க வைக்கிறது. என்பது குறிப்பிடதக்கது.
விழாநாட்கள்:
21-04-2023 – கொடியேற்றம்,
22-04-2023 – ஸ்ரீரங்கர் பல்லாக்கில் ஊர்வலம்,
23-04-2023 – சிம்ம வாகனத்தில் ஊர்வலம்,
24-04-2023 – கருடன் தோற்றத்தில் வீதி ஊர்வலம்,
25-04-2023 – அனுமந்தன் தோற்றத்தில் வீதி ஊர்வலம்,
26-04-2023 – யானை வாகனத்தில் அலங்கரித்து வீதி ஊர்வலம்,
27-04-2023 – மலர் அலங்கரிப்பில் வீதி ஊர்வலம்,
28-04-2023 – தங்க குதிரையின் மேல் வீதி ஊர்வலம்,
29-04-2023 – தேரோட்டம்,
30-04-2023 – சாமி வர்ணிப்பு,
01-05-2023 – சித்திரை திருவிழா நிறைவு.