சூடானில் மீண்டும் தொடங்கிய போர் – 270 பேர் உயிர் இழப்பு

0
144
#image_title

சூடானில் மீண்டும் தொடங்கிய போர் – 270 பேர் உயிர் இழப்பு

சூடான் நாட்டில் யார் ஆட்சியை பிடிக்கபோவது என்ற வாதத்தில், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த போரில் இதுவரை 270  பேர் உயிர் இழந்துள்ளனர், மேலும் 2600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

இந்த இருவருக்கும் நடந்த சண்டையில், மருத்துவமனைகள் உட்பட சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் சேதாரம் அடைந்துள்ளது.

இதனால் அந்த பகுதி மக்களுக்கு உணவு தட்டுபாடும் ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, கடந்த 2021 ம் ஆண்டு நடந்த ஆட்சியில் அப்தெல் பத்தா அல், புர்ஹன் தளபதியாகவும். முகமது ஹம்தான் டாக்லோ துணை தளபதியாகவும் ஆட்சி அமைத்துள்ளனர்.

துணை தளபதியான முகமது ஹம்தான் டாக்லோ, ஆர்.எஸ்.எப் எனப்படும் துணை ராணுவப் படையையும், ஆதரவு படையையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு. ஆட்சியை பிடிக்க முயற்சி செய்துள்ளார்.

எனவே அப்தெல் பத்தா அல், புர்ஹனை எதிர்த்து போரில் ஈடுபட்டு வருகிறார். இருவருக்கும் நடந்த சண்டை, இன்று பெரும் போராக மாறியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருக்கும் சூடானில். துப்பாக்கி சூடு, விமானப்படை தாக்குதல் போன்ற செயல்களை செய்து, மிகவும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போரில் இதுவரை 270 உயிர் இழந்துள்ளனர், 2600 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய வெளியுறத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. சூடான் நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது, அதில் சிக்கியுள்ள இந்திய ராணுவர்களை மீட்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Jayachithra