சட்டப் பேரவையில் ஆளுநரின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி!! நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

Photo of author

By Savitha

புதிய மெர்சிடன்ஸ் பென்ஸ் கார்கள் வாங்க 2 கோடியே 10 லட்சம் ரூபாயும், சுற்றுப்பயணத்திற்கு 15 லட்சம் என யாரும் குறை சொல்லாத அளவிற்கு ஆளுநர் பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் செலவிற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாகவும், அதன் நிதி மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  2021 ஆண்டு புதிய ஆளுநர்  பொறுபேற்ற பின்பு  ஆளுநர் செலவு தொடர்பாக கூடுதல் நிதிக்காக கோப்புகள் உருவாக்கப்பட்டு அனுப்பபட்டது.

இதில் 17  கோப்புகளில் அமைச்சர்கள், கூடுதல் நிதி செயலாளர்கள் ஆகியோர் கையெழுத்திட்டு ஆளுநர் மாளிகைக்கு நிதி வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

5 புதிய மெர்சிடன்ஸ் பென்ஸ் கார்கள் வாங்க 2 கோடியே 10 லட்சம் ரூபாயும், சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு 25 லட்சம் ரூபாயும் , ஆளுநர் சுற்றுப்பயணத்திற்கு 15 லட்சமும், அமைச்சரவை பதவி ஏற்புக்கு  10 லட்சம் ,கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்திற்கு 25 லட்சம், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு 20 லட்சம், புதிய பர்னிச்சர் வாங்கவும், கூடுதலாக அலுவலர்கள் ஊதியம் 70 ஆயிரமும்,  கூடுதலாக உதவியாளர்கள் சமையல் உதவியாளர்கள் என அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் என நிதி வழங்கப்பட்டுள்ளது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கும் யாரும் குறை சொல்லாத அளவிற்கு தமிழ்நாடு ஆளுநர் செலவிற்கு தமிழக அரசு கூடுதல் தொகைகளை வழங்கி உள்ளதாகவும் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.