இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் வேர்க்குரு அப்படியே கொட்டிவிடும்!!
கோடை காலம் அதாவது வெயில் காலம் வந்துவிட்டால் நம் எல்லாருக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சனை உடலில் ஏற்படும் வியர்வையால் உண்டாகும் வியர்க்குரு தான். இந்த வியர்க்குருவை வராமல் தடுக்கவும் சரி செய்யவும் இந்த பதிவில் ஒரு சூப்பரான மருந்து(Drink) எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* தயிர்
* கறிவேப்பிலை
* கேரட்
* கற்றாழை ஜெல்
செய்முறை
முதலில் எடுத்து வைத்துள்ள தயிரை நன்றாக கலந்து மோர் போல செய்து கொள்ளவும். பிறகு ஒரு மிக்சி ஜாரில் கேரட், கறிவேப்பிலை இரண்டையும் நறுக்கி மிக்சி ஜாரில் போட்டுத் கொள்ளவும். பிறகு அதில் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைக்கத் தேவையான அளவு மோர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஒரு பவுலில் நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதில் சிறிதளவு மோர் சேர்த்து குடிக்கலாம். இதில் இன்னொரு பொருளை யும் சேர்த்து குடிக்கலாம். அந்த இன்னொரு பொருள் வெந்தயம். வெந்தயமும் உடல் சூட்டை தணிக்க கூடிய பொருள் தான். வெந்தய பொடியை சேர்த்து இதனை குடித்து வந்தால் உடல் சூடு குறையும். மேலும் வியர்க்குரு பிரச்சனைகள் சரியாகும்.