கொசுக்கள் தொந்தரவா? உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை விரட்ட அருமையான வழி! 

0
208
#image_title

கொசுக்கள் தொந்தரவா? உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை விரட்ட அருமையான வழி! 

மாலை நேரம் ஆனாலே நமது வீட்டில் தொல்லை தரக்கூடிய விஷயங்களில் ஒன்று கொசுக்கள். எப்போது கடிக்கும் எந்த இடத்தில் கடிக்கும். என தெரியாமல் தூக்கத்தை கெடுக்க கூடியது இந்த கொசு தொல்லை.
கொசுக்களால் நமது தூக்கம் மட்டும்தான் கெடும் என்று இல்லை.

உயிருக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியதும் இந்த கொசுக்கள் தான்.

இந்த கொசுக்களை இயற்கையான முறையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் விரைவில் வெளியேற்றக்கூடிய ஒரு அற்புதமான வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. கிராம்பு- கிராமிலிருந்து வரக்கூடிய ஒரு விதமான கார நெடி கொசுக்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். எனவே கிராம்பு கொசுக்களுக்கு பிடிக்காத பொருள்.

2. கற்பூரம்- பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய இந்த கற்பூரத்தின் மணம் நமக்கு அமைதியை ஏற்படுத்தும். ஆனால் இதிலிருந்து வரக்கூடிய சல்பர் வாசனை கொசுக்களை ஓட ஓட விரட்டும்.

3. வேப்ப எண்ணெய்

4. மண் அகல் விளக்கு

கிராம்பு 3 எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும். அகல் விளக்கில் இடித்த கிராம்பை போட்டு அடுத்து அதில் ஒரு கற்பூரத்தை தூளாக்கி போடவும். பின்னர் இதில் வேப்பெண்ணை விட்டு திரியிட்டு தீபம் ஏற்றவும்.

இதனால் வரக்கூடிய வாசனையால் மூளை முடுக்குகளில், மற்றும் துணிகளில் ஒளிந்திருக்கும் கொசுக்கள் எல்லாம் தலை தெரிக்க ஓடிவிடும். வேப்ப எண்ணெயில் வரும் ஒரு விதமான கசந்த வாசனை கொசுக்களுக்கு மிகவும் எதிரி. எனவே அவை மயங்கிவிடும். இரவு தூங்குவதற்கு முன்னால் பெட் ரூமில் கூட இந்த விளக்கை ஏற்றிவிட்டு தூங்கலாம். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் நமக்கு ஏற்படாது.

Previous articleஉங்களுக்கு கிட்னி ஸ்டோன் எனப்படும் கல்லடைப்பு பிரச்சனையா? ஏழே நாட்களில் சரியாக இந்த ஒரு இலை போதும்! 
Next articleஆருத்ரா வழக்கில் அடுத்த அதிரடி!பொதுமக்களின் முதலீடுகளைப் பெற்ற 256 ஏஜெண்டுகள் கண்டுபிடிப்பு!