தீவிபத்தில் உடல் கருகி 4 மாணவர்கள் பலி! மீதி 4 மாணவர்களை மீட்ட சிறுமிக்கு துணிச்சலுக்கான விருது!!

Photo of author

By Jayachandiran

தீவிபத்தில் உடல் கருகி 4 மாணவர்கள் பலி! மீதி 4 மாணவர்களை மீட்ட சிறுமிக்கு துணிச்சலுக்கான விருது!!

திடீரென பள்ளி வாகனத்தில் தீ பிடித்ததால் 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் பகுதியில் கடந்த வாரம் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிவாகனம் ஒன்று யாரும் எதிர்பாராத வகையில் திடீரென புகைமூட்டத்துடன் தீப்பிடிக்க ஆரம்பித்தது. வாகனத்தில் விளையாடியது போல் இருந்த சிறுவர்கள் வாகனம் தீ பிடித்ததை கவனிக்கவில்லை.

இதைப் பார்த்ததும் பொதுமக்கள் வண்டியில் இருந்த பள்ளி மாணவர்கள் 8 பேரை காப்பாற்றினர். கொழுந்துவிட்டு எரிந்த தீயில் அமன்தீப் கவுர் என்ற சிறுமி துணிச்சலுடன் 4 மாணவர்களை காப்பாற்றினார். தீ மேலும் அதிகமான காரணத்தால் வாகனத்தில் மீதியிருந்த நான்கு பள்ளி மாணவர்கள் உடல் கருகி பலியாயினர்.

இதனையடுத்து, தீ விபத்தில் தைரியமாக பள்ளி மாணவர்களை காப்பாற்றிய சிறுமிக்கு பஞ்சாப் மாநில அரசு துணிச்சலுக்கான விருதை அறிவித்துள்ளது. மேலும், இந்த விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் என்றும், அச்சிறுமியின் கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களை காப்பாற்றிய சபாஷ் சிறுமி அமன்தீப் கவுருக்கு பொது மக்களிடையே பாராட்டுகள் குவிந்தன.