இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்.. எப்பேர்பட்ட மலச்சிக்கல் மற்றும் கேஸ் பிரச்சனை நிவர்த்தியாகும்!!

0
230
#image_title

இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்.. எப்பேர்பட்ட மலச்சிக்கல் மற்றும் கேஸ் பிரச்சனை நிவர்த்தியாகும்!!

நம்மில் சிலருக்கு தீராத கேஸ் அதாவது வாயுத் தொல்லை, மலச்சிக்கல், அஜிரணக் கோளாறு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை தீர்க்க இந்த பதிவில் ஒரு மூன்று மருத்துவ முறைகளை பார்க்க இருக்கிறோம். இந்த மருத்துவ முறைகளை பயன்படுத்தினால் வாயுத் தொல்லை, மலச்சிக்கல், அஜீரணம் ஆகியவை எந்தவித பக்க விளைவு இல்லாமல் சரியாகும்.

முதல் வைத்தியம்

முதல் வைத்திய முறையில் வயிறு சம்பந்தமான இந்த பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

* சீரகம்

* ஓமம்

* சோம்பு

* உப்பு

செய்முறை

முதலில் ஒரு அகண்ட பாத்திரம் எடுத்துக் கொள்ளவும். அதில் எடுத்து வைத்துள்ள சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் ஒமம் இரண்டையும் சேர்த்து வறுக்கவும். வறுத்து முடித்தவுடன் இதை ஆற வைக்க வேண்டும்.

ஆறிய பிறகு இதனுடன் சிறிதளவு சோம்பு சேர்த்து மிக்சி ஜாரில் வறுத்து வைத்த சீரகம், ஓமம், சோம்பு மூன்றையும் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இத்துடன் சிறிதளவு இந்து உப்பு சேர்த்து கலக்கி விட்டு ஒரு பாட்டிலில் போட்டு தேவைப்படும் பொழுது பயன்படுத்தலாம்.

மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் இரவு தூங்கச் செல்லும் முன்பு இதமான சூடு உள்ள ஒரு கிளாஸ் தண்ணீரில் தயார் செய்து வைத்துள்ள இந்த பொடியில் ஒரு பெரிய ஸ்பூன் அளவுக்கு சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும்.

மறுநாள் காலையில் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. கேஸ், அஜிரணம் உள்ளவர்கள் காலையில் உணவு எடுத்துக் கொண்ட பிறகு இதை குடிக்கலாம்.

பத்து வயது குழந்தைகளுக்கு இந்த பொடியை கலக்கி குடுக்க வேண்டுமென்றால் இதில் பாதி அளவு கலக்கி குடுக்கலாம். அரை டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் அளவுக்கும் குறைவாக இந்த பொடியை கலக்கி பத்து வயது உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இரண்டாவது வைத்தியம்

மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க இரண்டாவது வைத்திய முறையை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

* பசும்பால் அல்லது எருமை பால்

* கற்கண்டு

* பசுநெய் அல்லது எருமை நெய்

செய்முறை

பசும்பால் அல்லது எருமை பால் ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சுவைக்காக சிறிதளவு கற்கண்டு சேர்க்கவும். பிறகு இதில் பசுநெய் அல்லது எருமை நெய் சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். மறுநாள் காலையில் எந்த விதமான மலச்சிக்கல் பிரச்சனையும் சரியாகி விடும்.

மூன்றாவது வைத்தியம்

வாயுத்தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க மூன்றாவது வைத்திய முறையை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

* ஒரு கிளாஸ் வெது வெதுப்பான பால்

* விளக்கெண்ணெய்

* கற்கண்டு

செய்முறை

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான பாலை எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சுவைக்காக பாலில் சிறிதளவு கற்கண்டு சேர்க்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கற்கண்டை பாலில் சேர்க்க கூடாது.

நன்கு கலக்கி விட்டு ஒவ்வொரு மடக்காக குடிக்க வேண்டும். மறுநாள் காலையில் மலச்சிக்கல் என்ற ஒரு பிரச்சனை உங்களுக்கு இருக்காது.

மேற்கண்ட மூன்று முறைகளில் ஏதேனும் ஒன்றை தாராளமாக தைரியமாக செய்து பயன்படுத்தலாம். எந்தவித ஒரு பக்க விளைவும் நமக்கு இருக்காது.

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் வாயுத்தொல்லை அதாவது கேஸ் பிரச்சனை இருந்தால் முதல் மருத்துவ முறையில் கூறிய அந்த பொடியை வாரத்திற்கு ஒரு முறை கலக்கி குடிக்க வேண்டும்.