மதம்சார்ந்த பெயர்கள், சின்னங்களை பயன்படுத்தும் அரசியல்கட்சிகளுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக சையது வசீம் ரிஸ்வி தாக்கல் செய்த பொதுநல மனுவில், வாக்காளர்களை கவர மதம்சார்ந்த பெயர்கள், சின்னங்களை பயன்படுத்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அரசியல்கட்சிகளுக்கு தடை விதித்துள்ளது.
இருப்பினும் சில அரசியல் கட்சிகள் இவற்றை பயன்படுத்தி வருகின்றன. அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றத்தை நாடும் வகையில் இந்த மனுவை
மனுவை திரும்ப பெற அனுமதி அளிக்குமாறு மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை, ஏற்ற உச்சநீதிமன்றம், மதம்சார்ந்த பெயர்கள், சின்னங்களை பயன்படுத்தும் அரசியல்கட்சிகளுக்கு எதிரான மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்தது.