Breaking News, National, Politics

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் ஜெயிலர் பட நடிகர்! நான் இவருடைய ரசிகனாக வந்துள்ளேன் என பேச்சு!

Photo of author

By Savitha

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் ஜெயிலர் பட நடிகர்!! நான் இவருடைய ரசிகனாக வந்துள்ளேன் என பேச்சு!

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஜெயிலர் படத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரச்சாரம் செய்து வருகிறார். மேடையில் நான் இவருடைய ரசிகனாக வந்துள்ளேன் என்றும் பேசியுள்ளார் அந்த நடிகர்.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவராஜ் குமார். இவர் மறைந்த நடிகர் புனித் ராஜ் குமார் அவர்களின் சகோதரர். கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள இவர் மப்டி படத்தின் சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

நடிகர் சிவராஜ் குமார் தற்போது தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷ் அவர்களின் சகோதரர் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் சிவராஜ் குமார் ஆதரவாக பேசி வாக்கு சேகரித்தார். அது மட்டுமில்லாமல் மேடையில் பேசிய நடிகர் சிவராஜ் குமார், “நான் ராகுல் காந்தி அவர்களின் ரசிகனாக இங்கு வந்துள்ளேன். அவரது(ராகுல் காந்தி) நடைபயணம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று கூறினார். அண்மையில் நடிகர் சிவராஜ் குமார் அவர்களின் மனைவி கீதா சிவராஜ்குமார் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகர் சிவராஜ் குமார் பரப்புரை மேற்கொண்டுள்ள நிலையில் பாஜக கட்சிக்கு ஆதரவாக நடிகர் கிச்சா சுதீப் பரப்புரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதிரடியாக உயர்ந்த ஏடிஎம் கட்டணம்!!

கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து!