வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதிரடியாக உயர்ந்த ஏடிஎம் கட்டணம்!!

0
110
Shock for bank account holders!! Dramatically higher ATM fees!!
Shock for bank account holders!! Dramatically higher ATM fees!!

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதிரடியாக உயர்ந்த ஏடிஎம் கட்டணம்!!

தனியார் வங்கியான கோடக் மகேந்திரா வங்கி டெபிட் கார்டுகளுக்கான (ஏடிஎம்) வருடாந்திர கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண முறை மே 23 முதல் அமலுக்கு வருகிறது. இது வருடாந்திர கட்டணத்தில் இருந்து ரூ.60 உயர்த்தப்பட்டு ரூ.199  மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும்.

இந்த உயர்த்தப்பட்ட புதிய கட்டணமானது கோடக் மகேந்திரா வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். இது குறித்த தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டணங்கள், அதை பற்றி பார்க்கலாம்.

குறைந்தபட்ச இருப்பு தொகை (Minimum Balance) வைக்க தவறினால் 6 சதவீதம் அல்லது ரூ. 600 வரை இருக்கும்.

நிதி சாரா காரணங்களுக்காக வழங்கப்பட்டு திரும்ப அனுப்பப்படும் காசோலைகளுக்கு, ஒவ்வொரு முறையும் 50 ரூபாய் கட்டணம்.

வங்கியில் டெபாசிட் செய்து திரும்பிய காசோலைகளுக்கு ஒவ்வொரு முறையும் 200  ரூபாய் கட்டணம்.

தொலைந்த அல்லது திருடுபோன ஏடிஎம் கார்டை மாற்றுவதற்கு 200 ரூபாய் கட்டணம்

வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்ட உள்நாட்டில் ஏடிஎம்மில் பணம் எடுத்தலுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரு மாதத்தில் ஒரு கார்டு இல்லா பணத்தை எடுக்க கட்டணம் கிடையாது. அதன் பிறகு எடுக்கும் பொது 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

author avatar
CineDesk