யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!!

0
198
Video on Governor and Chief Minister on YouTube!! Police Alert!!
Video on Governor and Chief Minister on YouTube!! Police Alert!!

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!!

யூடியூப்பில் வீடியோ போடுவது என்பது தற்போது மிக அதிகமாகியுள்ளது. கொரோனாவின் போது இருந்த ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் உள்ள அனைவரும் வீடியோ போட்டனர். இல்லத்தரசிகள் சமையல் செய்வதையும், சமையல் குறிப்புகள், வீட்டு குறிப்புகள் போன்றவற்றை வீடியோ எடுத்து யூடியூப்பில் போட்டனர்.

மேலும் காமெடி வீடியோக்கள், ஊர் சுற்றும் வீடியோக்கள், எந்த ஊரில் எந்த உணவு வகைகள் பிரபலமாக உள்ளது, மருத்துவக் குறிப்புகள், சினிமா விமர்சனங்கள், அரசியல் பற்றிய பேச்சுகள் மற்றும் விமர்சனங்கள் போன்ற எல்லா வகை வீடியோக்களையும் நாம் யூடியூப்பில் காணலாம். இது போன்ற வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை கொண்டிருந்தால், யூடியூப் நிறுவனம் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது.

அதிக பார்வையாளர்களை வேண்டியும், அவர்களை கவர்வதற்க்கும் அரசியல் பற்றியும், அதில் இருப்பவர்களை பற்றியும் ஒரு சிலர் மோசமான கருத்துக்கள் மற்றும் அவதூறு வீடியோக்களை யூடியூப்பில் போடுகின்றனர். இவ்வாறு வீடியோ போடுபவர்கள் போலியாக கணக்கை துவங்கி வீடியோ போடுகின்றனர்.

இது போல் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் போன்றோர் மீது உள்ள 386 அவதூறு வீடியோக்களை நீக்க வேண்டும் என யூடியூப்பிற்கு தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சைபர் க்ரைம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், மற்றும் அமைச்சர்கள் மீது, யூடியூப்பில் போலி கணக்குகள் மூலம் வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இது வரை இந்த ஆண்டில் மற்றும் 40 பதிவுகள் நீக்கப் பட்டுள்ளது. பிளே ஸ்டோரில் உள்ள 221 சட்ட விரோதமான கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ள 386 வீடியோக்களை யூடியூப் நீக்க வேண்டும் எனவும், பிளே ஸ்டோரில் மேலும் உள்ள  61 கடன் செயலிகளை நீக்குமாறும் பரிந்துரைக்கப் பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Previous articleகிராமப் புறங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
Next articleஇனிமேல் புதிய மின் இணைப்பு வாங்க விரும்புவோருக்கு வெளிவந்துள்ள அசத்தல் தகவல்கள்! தமிழக மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!