சமையல் எண்ணெய் விலை குறைகிறது!! மக்கள் மகிழ்ச்சி!!

0
182
Cooking oil prices are coming down!! People are happy!!
Cooking oil prices are coming down!! People are happy!!

சமையல் எண்ணெய் விலை குறைகிறது!! மக்கள் மகிழ்ச்சி!!

அதிகமாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தும் நாடு இந்தியா. இதற்காக மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. சமையல் எண்ணெய்களின் விலை டன்னுக்கு 200 டாலர் முதல்  250 டாலர் வரை குறைந்துள்ளது. ஆனால் இது பொதுமக்களை சென்று சேரவில்லை.

தற்போது சர்வதேச சந்தைகளில் எண்ணெய்களின் விலை குறைந்துள்ளதால், அந்த விலை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களும் எம்.ஆர்.பி. விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.  சர்வதேச சந்தைகளில் விலை குறைந்திருந்தாலும், மக்களுக்கு விலை குறையவில்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களின் சங்கம் ஆலோசனை நடத்தி எண்ணெய் விலையை குறைக்க முடிவு செய்துள்ளன.

அதன்படி பெரும்பாலான பிராண்டுகள் தங்களின் எம்.ஆர்.பி. விலையை குறைத்துள்ளது. அதிகபட்சமாக ரூ.20 வரை லிட்டருக்கு குறைத்துள்ளன. திருத்தப்பட்ட எம்.ஆர்.பி. கொண்ட எண்ணெய்கள் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு கிடைக்கும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சூரியகாந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் உட்பட அனைத்து எண்ணெய்களின் விலைகள் ஓரளவிற்கு குறைந்து இருந்தாலும், கடலை எண்ணெயின் விலை மற்றும் குறையவில்லை.ஆனால் கடந்த வருடங்களில் சமையல் எண்ணெயின் விலை மிக உச்சத்தில் இருந்தது. இப்போது குறைந்துள்ள விலை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.