முதலமைச்சரின் நெருங்கிய ஐஏஎஸ் மாற்றமா? இவர்தான் அடுத்த ஐஏஎஸ் கோட்டை வட்டரங்கள் தகவல்!!

0
206
Is the Chief Minister's closest IAS replacement? This is the next IAS Fort Circles Information!!
Is the Chief Minister's closest IAS replacement? This is the next IAS Fort Circles Information!!

முதலமைச்சரின் நெருங்கிய ஐஏஎஸ் மாற்றமா? இவர்தான் அடுத்த ஐஏஎஸ் கோட்டை வட்டரங்கள் தகவல்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய தனி செயலாளர் தான் உதயச்சந்திரன் இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகனுக்கு மிகவும் நெருங்கியவர் ஆவார்.

தமிழக அரசின் பல பதவிகளில் அங்கம் வகித்தவர் தான் முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன், குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் டி.என்.பி.எஸ்,சி யில் பல மாற்றங்களை கொண்டு வந்த பெருமைக்குரியவர், மேலும் நேர்மையாளர் என்று பெயர் பெற்றவர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காரணமே பீகார் சேர்ந்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் மருமகன் சபரீசன் என்பது அனைவரும் அறிந்ததே, வட மாநில அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்னதான் தேர்தல் ஆலோசனை வழங்கினாலும் அதனைச் செயல்படுத்தும் இடத்தில் இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு நம்பிக்கையானவர் தான் முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன், இவருடைய பணி முதலமைச்சர் பணிகளை ஒருங்கிணைப்பது, வேலைப்பளுவை குறைப்பது மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்குவது.

முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் சொல்வதை முதலமைச்சர் ஸ்டாலினே கேட்கும் அளவிற்கு அதிகார மையமாக மாறினார் ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன், இவரை மீறி எந்தத் துறை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக சந்திக்கும் வாய்ப்புகள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் அதிகார மையமாக இருக்கிறார் என்பது பல சீனியர் திமுக அமைச்சர்களே பரவலாக பேசத் தொடங்கினர்.

முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் அதிகார செல்வாக்கு வனத்துறை அமைச்சரை மாற்றும் வரையில் சென்றது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமாக மாநில உளவுத்துறை அதிகாரி டேவிட்சன், மற்றும் சில அமைச்சர்களால் பேசப்படும் விசயங்கள், ஆட்சியை பற்றிய தகவல்கள் எதுவும் முதலமைச்சர் காதுக்கு செல்லாது, மீறி சென்றாலும் தனி செயலாளர் உதயச்சந்திரன் தான் முதல்வரிடம் கூற முடியும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் சின்னவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நல்ல பதவி வேண்டும் என்று தந்தை மு.க.ஸ்டாலினிடம் சொல்ல, அதைத் தனி செயலாளர் உதயச்சந்திரனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்ல, அது முடியாது சரியாக வராது என்று கூறியுள்ளார், மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தி உள்ளார், டென்சன் ஆன உதயச்சந்திரன் “என்னை நீக்கி விட்டு வேறு நபரை போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

இந்த பரிந்துரையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரனுக்கு பிடித்த பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதவிக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரனுக்கு பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி அல்லது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்படவுள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

Previous articleசேனலை லைக் செய்தால் பணம்!! புதிய மோசடி!!
Next articleதமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!!