சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது??
தமிழகத்தில், சமீப நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சேலம், சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்தக் கோடை காலத்தில் என்ன தான் ஏ.சி, மின்விசிறி இருந்தாலும் அனல் காற்று தான் வீசுகிறது. இந்தக் கோடை காலத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை இங்கு பார்க்கலாம்.
செய்ய வேண்டியவை:-
முதலில், தொலைக்காட்சி, செய்தித்தாள் வாயிலாக உள்ளூர் வானிலை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். தாகம் இல்லையென்றாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதில் இடர்பாடுள்ளவர்கள் மருத்துவரை அணுகலாம் உடலின் நீர் சத்தை தக்க வைக்க ORS, வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, நீராகாரம், எலுமிச்சை நீர், மோர், இளநீர் பருக வேண்டும் லேசான எடை கொண்ட, வெளிர் வண்ண தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். திறந்தவெளியில் இருந்தால் தலையை மூடவும். துணி, தொப்பி அல்லது குடையை பயன்படுத்தலாம்.
கண்களை பாதுகாக்க குளிர் கண்ணாடியும், சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனும் பயன்படுத்துங்கள் முதலுதவி பயிற்சி பெற்றிருத்தல் நல்லது வயதானவர்கள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது அதிக எடை கொண்டவர்கள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்; அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
செய்யக் கூடாதவை:-
வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை , பிற்பகலில் வெளியில் இருக்கும்போது கடுமையைான உடலுழைப்பை தவிர்க்கவும் வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். நண்பகல் நேரங்களில் சமைப்பதை தவிர்க்கவும், காற்றோட்டத்திற்கு ஏதுவாக கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்திருத்தல் நல்லது.
மதுபானங்கள், தேநீர், காஃபி மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்கவும், இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படும் அதிக புரதம், உப்பு, காரமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவைத் தவிர்க்கவும், பழைய உணவை உண்ண வேண்டாம்.
கணினிகள் சாதனங்களைப் போலவே தேவையற்ற வெப்பத்தை உருவாக்கக்கூடிய ஒளிரும் ஒளி விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மேலும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதய நோயாளிகள் வெயிலில் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.